சிட்டு-குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

90.00

SKU: 8073

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பகிர்:

எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்குப் பலவிதங்களில் நன்மை செளிணிபவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்குச் சிட்டுக்குருவிகள் மற்ற பறவைகளைவிட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும்போது தங்கள் கால்களைப் பிணைத்துக்கொண்டு படபடவெனச் சிறகடித்துக் கீழே விழுவதையும் கண்டிருப்போம்.

நமது வீட்டில் கூடு கட்டி இருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண் விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த

சிட்டுக்குருவி சில பகுதிகளில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து, பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியமாக நகரங்களின்

சில பகுதிகளில். இவை ஏன் குறைந்து போயின என்பதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். ஓர் உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பல காலமாக, அறிவியல்பூர்வமாகக் கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் எத்தனை இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துபோய்விட்டது என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்து அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது கூடாது.

 

சிட்டு குருவிகளின் வல்வும் வேள்சியும் – ஆதி வள்ளியப்பன் – சுற்றுச்சூழல் – காக்கை கூடு

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!