சுவை பட உண்

80.00

SKU: 8074

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பகிர்:

'சுவை பட உண்...'

நூல் தலைப்பில் புதுமை இருப்பதைப் போல, உள்ளிருக்கும் உணவுகளிலும் நிறையவே புதுமை இருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு ரகங்களின் பெயர்களை முதலில் படிக்கும் போது, வாய்க்குள் நுழைவதற்கே கடினமாக இருந்தது! அதாவது பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகளைத் தொகுத்து வழங்கியதோடு, அந்நாட்டு மொழிகளிலேயே பெயர்களும் பதிவு செய்யப்பட்ட சிறப்பு!

வெவ்வேறு நாட்டு உணவுகளின் பெயர்கள் வாய்க்குள் நுழையாவிட்டாலும், அவ்வுணவுகளை சமைத்து சாப்பிட்டால், பலமுறை வாய்க்குள் நுழையும் என்றே நினைக்கிறேன். படிக்கும் போதே நாவூறுவதை தவிர்க்க முடியவில்லை. பல்வேறு உணவு ரகங்கள்... அதன் தயாரிப்பு முறைகள் என அழகிய உணவுத் தொகுப்பு இந்த நூல்! பல்வேறு நாட்டு உணவுகள், நாம் மறந்து போன, சமைக்கத் தவிர்த்த நமது பாரம்பரிய உணவுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. மறைந்திருக்கும் பல்வேறு பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்த மரு.விக்ரம்குமாருக்கு பாராட்டுகள்!

ஒவ்வொரு உணவு ரகமும் மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சிறப்பு உணவுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருளாக, மருந்தாகவும் இருக்கும் ரெசிப்பிகள், வாசிப்போரை நிச்சயம் கவரும்!

சுவை பட உண்… அனைத்து சமையலறையிலும் இடம் பெற வேண்டிய அவசியமான நூல்!

 

சுவைபட உன் – சித்த மருத்துவம் – விக்ரம் குமார் – காக்கை கூடு

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!