பல்லவ திலகம்

180.00

SKU: 10682

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

296

எடை

200

மொழி

பகிர்:

இரண்டாவது நந்திவர்மன் புதல்வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும், அவனுக்குப் பின் வந்த பல்லவர்கள் அதையொட்டி ‘பல்லவதிலக குலோத்தவ’ என்ற பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகவும் திரு. சுப்பிரமணிய ஐயர் “Historical Sketches of Ancient India” என்ற நூலில் கூறுகிறார். பேராசிரியர் கோபாலன் இரண்டாவது நந்திவர்மனின் ராஷ்டிரகூட மனைவியான ரேவா தேவிக்குப் பிறந்தவன் தந்திவர்மனென்றும், அவன் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவனென்றும் “History of the Pallavas” (பல்லவர் வரலாறு) என்ற நூலில் சொல்லுகிறார். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி கோவிலிலுள்ள கல்வெட்டொன்று தந்திவர்மன் வைணவனென்பதற்கும் பாரத்வாஜ கோத்திரத் தவனென்பதற்கும் சான்று கூறுகிறது. ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் கோவிந்தன் காஞ்சி மீது படையெடுத்துத் தந்திவர்மனைத் தோற்கடித்த விவரங்கள் பண்டிட் விசுவேசுவர நாத்ரென் எழுதிய “History of the Rashtrakutas” என்ற நூலில் இருக்கின்றன.

இந்த அனைத்தையும் ஆதாரமாகக் கொண்டு ‘பல்லவ திலகம்’ என்ற இந்தச் சரித்திர நவீனத்தைப் புனைந்திருக்கிறேன். தந்திவர்மன் தந்தையான இரண்டாவது நந்திவர்மன் சிறந்த வைணவனென்பதற்கும் அவன் திருமங்கையாழ்வாரின் பக்த னென்பதற்கும் சரித்திர ஆதாரமுமிருக்கிறது. இலக்கிய ஆதாரமுமிருக்கிறது. நாலாயிர திவ்யபிரபந்தத்திலுள்ள பரமேசுவர விண்ணகரத்தில் நந்திவர்மன் வெற்றிகளைச் சிறப்பித்து ஆழ்வார் பாடியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

296

எடை

200

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“பல்லவ திலகம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!