Lemuria Enterprises

விசாரணை

240.00

SKU: 10714

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

230

எடை

300

மொழி

பகிர்:

யாரோ ஒருவர் யோசஃப் க.வைப் பற்றி வேண்டுமென்றே அவதூறாகச் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு தவறும் செய்யாத போது, ஒரு நாள் காலை திடீரென்று அவன் கைது செய்யப்பட்டான். அவன் வசிக்கும் அறையை அவனுக்கு வாடகைக்கு விட்டிருந்த திருமதி க்ரூபாஹின் சமையற்காரி ஒவ்வொரு நாளும் காலை சுமார் எட்டு மணிக்கு அவனுக்கு உணவு கொண்டுவருவாள். அன்று அவள் வரவில்லை. அப்படி ஒருபோதும் நடந்ததில்லை . க. சிறிது நேரம் காத்திருந்தான். எதிர்ப்புறம் வசித்துவந்த முதியவள் வழக்கத்துக்கு மாறாக ஆவலுடன் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைப் படுக்கையில் இருந்தபடியே பார்த்தான். பிறகு ஓர் அந்நிய உணர்வுடன் பசியும் சேர்ந்து கொள்ள, அவன் அழைப்பு மணியை அடித்தான். உடனே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இதுவரை அவன் ஒருபோதும் பார்த்திராத ஒருவன் உள்ளே நுழைந்தான். சிறிது ஒல்லியாக இருந்தாலும் அவனுக்கு நல்ல கட்டான உடலமைப்பு. மிகக் கச்சிதமாகத் தைக்கப்பட்ட கறுப்பு நிற உடையை அணிந்திருந்தான். பயணியின் உடைபோல் எல்லா வகையான மடிப்புகளும் பைகளும் பக்கிள்களும் பித்தான்களும், கூட ஒரு வார்ப்பட்டையும் வைத்துத் தைக்கப்பட்டிருந்த காரணத்தினால், அது எந்த வகையில் பயன்படும் என்பது தெளிவாக இல்லாவிட்டாலும், பார்ப்பதற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட வகையில் பயன்படும் என்று பட்டது. ”யார் நீங்கள்?” என்று கேட்டவாறே க. தன் படுக்கையில் பாதி நிமிர்ந்து உட்கார்ந் தான். ஆனால் வந்தவன், தான் அந்த அறைக்குள் வந்தது அனைவரும் அறிந்த மிகச் சாதாரணமான விஷயம் போல், க. கேட்ட கேள்வியை அலட்சியப்படுத்தி விட்டுத் தன் போக்கில் “நீங்கள் அழைப்பு மணியை அடித்தீர்களா?” என்று மட்டும் கேட்டான். அதற்குக் க. “அன்னாதானே காலை உணவு கொண்டுவர வேண்டும்?” என்றான்.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

230

எடை

300

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“விசாரணை” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

நீயும் விரும்புவாய்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!