போகர் ஏழாவது காண்டம் உங்கள் கைகளில் தவழ்வதைக்கண்டு பெருமை அடைகிறோம். தமிழ் கூறும் நல் உலகுக்கு இந்தச் சிறந்த விருந்தைப் படைக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பயன் அளித்துள்ளது.
நீண்ட நெடுங்காலமாக கண்ணில் காண்பதற்குக் கூட அரிதாக இருந்த போகர் 7000, போகர் நிகண்டு போன்ற நூல்களை வெளியில் கொண்டு வந்ததை எண்ணி புளகாங்கிதம் அடைகிறோம். போகர் 12000 எனும் படைப்பு இருப்பதாகவும் அதை எப்படியேனும் வெளிக்கொணர வேண்டுமென பல நல்ல உள்ளங்கள் தெரிவிக்கின்றன(ர்). ஆனால் அந்த புத்தகத்தை வைத்திருப்பதாக ஒரு சிலர் தெரிவித்து விட்டு அதைக் கேட்டு அணுகினால் வேறு யாரிடமோ கொடுத்துவிட்டதாகவும், திரும்ப கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதே போன்று தான் அகத்தியர் 12000 எனும் நூலும் கிடைத்தபாடில்லை. அதிலாவது முதல் ஐந்து காண்டங்களையாவது வெளியிட்டிருக்கிறோம் எனும் மகிழ்ச்சி எங்களுக்கு உண்டு.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.