வயலெட் யோசித்துவிட்டு சொன்னாள்.
“நீங்கள் செய்யும் தவறுகூட புனிதம் ஆகும், அதை நீங்கள்
ஒப்புக்கொள்ளும்போது…!”
இப்படிக்கு கலிபோர்னியா காதலி.” பால் ஹாரீஸ் விழிகளை உயர்த்தினார். “என்ன சொன்னீர்கள்…? கலிபோர்னியா காதலியா?”
“ஆமாம்…” “யார் அந்த கலிபோர்னியா காதலி?”
“எனக்குத் தெரியாது.’ ரிச்சர்ட்டிடம் அந்தக் கடிதத்தைக் காட்டி நீங்கள் எதுவும் )
கேட்கவில்லையா…?” “நான் எப்படிக் கேட்க முடியும்…? அவர் ஏதாவது தப்பாக
நினைத்துக் கொண்டால்…?” பால் ஹாரீஸ் ஒரு பெருமூச்சோடு தன் நெற்றியைப் பிடித்துக்
கொண்டார்.
“யார் அந்த கலிபோர்னியா காதலி….?”
Kaliporniya Kadhali – Honk Kong Viligal – Rajesh Kumar – RK Publishing – Novel