எல்லோருக்குமே விருப்பம். பின் அதுவே முடிவாகிவிட்டது. ஆரோக்கியம் தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். அதற்குத் தகுந்தாற்போல சகாயமும் போகாமல் இருப்பதற்கில்லை என்று கூறிவிட்டாள். ஆரோக்கியமும் சகாயமும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் சண்டை இல்லாமல் ஒத்துப்போயினர். மேரியும் பீட்ட ரும் ஆரோக்கியத்தைப் பிள்ளைப்பூச்சிபோல அரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஜோசப்புக்கும் விருப்பம்தான் என்றாலும் எப்போதும்போல் பேசாமல் இருந்து விட்டான். இதனால் சகாயத்துக்கு ஜோசப்மேல் கோபம்.
சவுரி மட்டும் விடாமல் முணுமுணுத்துக்கொண்டே இருந்தான். ஆரோக்கியத்தையும், மற்ற எல்லோரையுமே குறைமேல் குறை சொன்னான். இந்த ஒரு வாரக் காலத்தில் இரவில் சக்கிலியக் குடிப் பெரியானுடன் அதிகம் பேசிக்கொண்டிருந் தான். மனம் சரியாக இல்லாவிட்டால் சவுரி, பெரியானிடமே தங்கிவிடுவான். ரொம்பவும் அபூர்வமாகவே அவனுக்கு மனசு நிலையில்லாமல் போகும்.
Reviews
There are no reviews yet.